Instagram Logo

kavignarthamarai

Kavignar Thamarai

தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்
.
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
.
நாளைய உலகம் நனிசைவம் (Vegan)
.
Offical Handle

88
posts
15
followers
52.5K
following

18.5.2026.

நினைவில் தாய்நாடுடையவர்
நிலவில் கால்பதித்தாலும்
பார்வை தேடுவதென்னவோ
பெற்றெடுத்த மண்ணைத்தான் !!! 👁

#தமிழீழம்மலரும்
#JusticeForEelamTamils
#WeStandWithYouTamils
#TamilisEmotion

856
50
6 days ago

15.6.26. 'வாசிப்பு அனுபவப்பகிரல்' 🎉.

நாளை (16.5.26, சனி மாலை 4 மணி அளவில்) கருநாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கமும் பா.சு.மணி இலக்கிய வட்டமும் இணைந்து 'வாசிப்பு அனுபவப் பகிரல்' என்கிற வகையில் , என் கவிதைகள், பாடல்கள் குறித்து கவிஞர் மா.வித்யா அவர்கள் வழங்கும்உரை நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்.
இதுபற்றி சில நண்பர்கள் எனக்கு செய்தி அனுப்பியதன் மூலம் தெரிந்து கொண்டேன். எனக்கு கவிஞர் வித்யா அவர்களைத் தெரியாது. இன்றுதான் (செல்பேசியில்) பேசினேன். அவர் என் படைப்புகளை நீண்டகாலமாகத் தொடர்ந்து வந்திருக்கிறார். வாழ்வின் பல நிகழ்வுகளில் அவை துணையாக வந்ததெனப் பகிர்ந்த போது வியப்பாக இருந்தது. என் படைப்புகளின் தாக்கத்தில் தானும் எழுத ஆரம்பித்ததாகச் சொன்னார் 😍. எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் பாருங்கள் ! 😍
தன் அனுபவங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவே இந்த நிகழ்ச்சி எனத் தெரிவித்தார். என் அனுபவங்கள் சிலவற்றை நானும் அவரோடு பகிர்ந்தேன்.
நாளைய நிகழ்ச்சியைப் பதிவு செய்து அனுப்பி வைப்பதாகக் கூறியுள்ளார்.
'பெங்களூரு'வில் வசிப்பவர்கள் வாய்ப்பிருப்பவர்கள் சென்று வாருங்கள்.

கீழே அழைப்பிதழை இணைத்திருக்கிறேன்.

598
97
1 weeks ago

https://www.facebook.com/share/p/1Gu61jErBS/
23.3.26 'உலக நாத்திகர் தினம்'
'World Atheist Day' 🔥

இன்று உலக நாத்திகர் தினம். சென்ற ஆண்டு சுருக்கமாக எழுதியதையே ஒரு சிறு புதிய முன்னுரையோடு மீண்டும் பதிவிடுகிறேன்.
கடவுள் நம்பிக்கையால் நிரம்பியது இவ்வுலகு. வெறும் கடவுள் நம்பிக்கை என்ற இடத்தில் நின்றிருந்தால்கூட பரவாயில்லை, ஆனால் ஒவ்வொரு கடவுள் நம்பிக்கையும் ஒரு மதத்தை இட்டு வருகிறது. ஒவ்வொரு மதமும் விதவிதமான போதனைகளோடு வருகிறது. வன்முறை தலைவிரித்து ஆடினாலும், 'அன்பை'யே எல்லா மதமும் போதிக்கின்றன என்று உருட்டுவதற்கு ஒரு குறைச்சலுமில்லை. அன்புதான் உள்ளடக்கம் என்றால் உலகில் எதற்கு இத்தனை இரத்தக்களறி ? 😡😡😡.
கடவுள் சரியாகத்தான் இருக்கிறார், மனிதன்தான் தவறிழைக்கிறான், அதற்குக் கடவுள் என்ன செய்வார் (பாவம்!) என்பார்கள் ! 😡. அப்படியான மனிதனைக் கட்டுப்படுத்த முடியாத, கையாலாகாத கடவுள் எதற்காக ??? 🤭
கடவுள் ஒருவரே என்றே எல்லா மதமும் சொல்கின்றன, ஆனாலும் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒரு கடவுளை வைத்திருக்கின்றனர். எல்லா கடவுளும் ஒருவரேவா என்று கேட்டால் 'ஆமாம், ஆனால் என் கடவுள்தான் அவர்/அது' என்பார்கள். ஆக, அடுத்தவன் கடவுளைக் கடவுளாகவே ஒருவரும் மதிப்பதில்லை, ஏதோ சந்தையில் தவிட்டுக்கு வாங்கிய ஏமாளிக் குழந்தை போலவே பாவிக்கிறார்கள். இந்தக் கூத்தையெல்லாம் பார்த்துக்கொண்டு அல்லது பாராமல் அந்தக் கடவுள்/ளர் அண்டசராசரத்தில் ஏதோ மூலையில் ஒளிந்து கொண்டு நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருக்கிறார்/கள் 😂 -
'அடிச்சுகிட்டு சாவுங்கடா' என ! 😂😂😂.
-------

#மீள்பதிவு.
23.3.25 ' உலக நாத்திகர் தினம்'
'World Atheist Day'.
நல்லவேளை நாத்திகர்களுக்கு என ஒரு தினம் வைத்தார்கள் ! 😀. நாத்திகராய் இருப்பது நன்றாக இருக்கிறது. தொல்லைதரும் கடவுளர், அவர்களிலிருந்து முளைத்து வரும் மதங்கள், மூடநம்பிக்கைகள், சடங்கு/சம்பிரதாய வில்லங்கங்கள் - எதுவும் இல்லாமல், 'ஏன் எப்படி எதற்கு' எனக் கேள்விகள் கேட்டு விஞ்ஞானத்தின் வழி அஞ்ஞானத்தை விரட்ட முயல்வது வசதியாக இருக்கிறது.
உலகத்தின் பாவப்பட்ட 'சிறுபான்மை'யினராகிய நாத்திகர்கள் பெருகட்டும் ! அதன்வழி, மதங்களால் ஏற்படும் தீமைகள் ஒழியட்டும் ! 🌺🌺🌺

Happy being an Atheist ❤. Free of God theory and venomous Religions 🙏. In the Pursuit of Knowledge 👍. Join me 🤝 🤝🏽👏.

152
8
2 months ago

https://www.facebook.com/share/p/18MVEUiGDD/
8.3.2026. 'மகளிர் தினம்' - என்
மகிழ்ச்சி 🌺💐🌺

மகளிர்தினத்திற்கென்று நான் தனியாக எதுவும் எழுதுவதில்லை. ஆனால் கொஞ்ச காலமாகவே என் மனதில் ஓடிக் கொண்டிருந்த ஒரு விதயத்தை இன்று எழுதலாமென்று நினைக்கிறேன்.
ஐம்பதாண்டுகளுக்கு முன்பு நாட்டில் மகளிர் நிலை என்னவென்று தெரியுமா ? எல்லாப் பெண்களுக்கும் படிக்க வாய்ப்பு கிடைக்காது, கிடைத்தாலும் பள்ளிப்படிப்பைத் தாண்டாது, தாண்டினாலும் வேலைக்குப் போக முடியாது - திருமணம் செய்து வைத்து விடுவார்கள். திருமணமாகி வேறு வீட்டுக்குச் சென்றால் முடிந்தது கதை, அங்கேயே உழன்று, அடக்கமாகி விட வேண்டியதுதான் !.
சிலருக்கு நல்ல புகுந்தவீடு கிடைத்தால் அதை ஏற்று, தன்னை அங்கே பொருத்திக் கொண்டு, நல்லமுறையில் அடுத்த தலைமுறையை ஆரம்பித்து வைப்பார்கள்.
அப்படியான திருமண வாழ்க்கை கிடைக்காதவர்கள் கதி ?? 😓.... அடி, உதை, குடிகாரன், வரதட்சணை, மாமியார் கொடுமை, வாழாவெட்டி, மலடி...
சிறுவயதிலிருந்து பெண்கள் திருமணம் நோக்கியே வளர்க்கப் பட்டார்கள். அதற்குத்தான் எத்தனையெத்தனை வேண்டுதல்கள், நோன்புகள், கோயில்கள், பரிகாரங்கள், பூசைகள் ... 😲 !!!
இப்படியெல்லாம் உருண்டு புரண்டு ஒருவழியாகத் திருமணமாகிப் பின் அந்தக் கணவன் எதிர்பாராமல் இறந்து போய்விட்டால், சமூகத்தில் அந்தப் பெண்ணின் கதி என்ன தெரியுமா ??? வார்த்தைகளால் விவரிக்கத் தக்கதன்று அந்தக் கொடுமை ! 😓.
இந்தப் பின்னணியில்தான் ஒரு செய்தி பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.
அப்போதெல்லாம் எங்கள் ஊரில் (கோவை) கைம்பெண்கள் வெள்ளை சேலைதான் அணிவார்கள். நகரங்களில் சற்றுத் தேவலாம், கிராமப்புறங்களில் கேட்கவே வேண்டாம். நகரங்களில்கூட வெள்ளைப்புடவை அணியாவிட்டாலும் கட்டாயம் பொட்டு, பூ வைக்க மாட்டார்கள். வைக்க முடியாது, 'நாக்குமேல் பல்லைப் போட்டு' யாராவது பேசி விடுவார்கள். எங்களூர்ப் பெண்களுக்கு மானவுணர்வு அதிகம். கிணற்றில் பாய்ந்து விடுவார்கள் அல்லது அரளிவிதையை அரைத்து விடுவார்கள் !.
அன்றாடம் குறைந்தது இரண்டு வெள்ளைச்சேலை கண்ணில் படும். காய்கறிக்கூடை சுமந்து விற்பவர்கள், தெரு சுத்தம் செய்பவர்கள், வீட்டுப் பணிப்பெண்கள்... வாரச்சந்தைக்குப் போனால் ஏராளமான பேரை வெள்ளைச்சேலையில் பார்க்கலாம். பலபேரை 'வெள்ளைச்சேலைக்காரம்மா' என்ற அடைமொழியோடே குறிப்பிடுவார்கள். இவர்களை நற்காரியங்களில் முன்னிறுத்த மாட்டார்கள். 'அமங்கலிகள்', மங்கல நிகழ்வுகளில் நலங்கு வைப்பது, விழா தொடங்கி வைப்பது, விளக்கேற்றுவது, குழந்தைக்குப்

983
57
2 months ago

14.2.26நேற்று கலைவாணர் அரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு விருதுவிழாவில், சிறந்த திரைப்படப் பாடலாசிரியர் விருதுகள் இரண்டு பெற்றேன்.

1. தாய்நிலம் (2020)
2. மாறா (2021).

மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஐயா அவர்களுக்கும், விருதுகள் வழங்கிச் சிறப்பித்த மாண்புமிகு துணைமுதல்வர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழ்வளர்ச்சி & செய்தித்துறை அமைச்சர் மாண்புமிகு மு.பெ.சுவாமிநாதன் அவர்களுக்கும், விழாவைச் சிறப்பாக எற்பாடு செய்து வரவேற்று உபசரித்த செய்தித்துறை அலுவலர்களுக்கும் மனமார்ந்த நன்றி 🙏.
தாய்நிலம், மாறா இவ்விரண்டு படங்களுமே கோவிட் காலத்தில் உருப்பெற்றவை. கடும்நெருக்கடிகளுக்கிடையே படம், பாடல்களை உருவாக்கினார்கள். ஆனால் அவற்றை வெளியிட முடியவில்லை 😓. 'மாறா'வாவது இணையத்திரையில் (OTT) வெளியானது. தாய்நிலம் அதுவுமில்லை, வெளிநாட்டுத் திரைவிழாக்களில் விருதுகள் பெற்றதோடு சரி ! 😓.

தாய்நிலம் சிறப்பான படம். இசையமைப்பாளர் திரு அவுசப்பச்சேன் அவர்கள் உருவாக்கிய உருக்கமான உச்சக்காட்சிக்கான பாடலையே நான் எழுதியிருந்தேன். மகள் தந்தைக்குப் பாடும் 'ஆகாயம் மேலே, அப்பா நீ கீழே' என்ற பாடலைப் பாடிய சிறுமி (அப்போது 13 வயது) வர்ஷா ரஞ்சித்தும் சிறந்த பாடகிக்கான விருது பெற்றார். Varsha Renjith.
மாநில அரசு விருதுகள் இரண்டு பெறுவதால் உற்சாகமடைந்து இயக்குநர் அபிலாஷ் தேவன் Abhilash G Devan மற்றும் படத்தயாரிப்பாளர் மருத்துவர் திரு அமர் இராமச்சந்திரன் ஆகியோர் படத்தை வெளியிட முயற்சி எடுத்துள்ளனர் 🤞. நேற்றைய விழாவில் கலந்துகொள்ள தயாரிப்பாளர் திரு அமர் இராமச்சந்திரன் தன்மகள் நேகாவோடு கேரளாவிலிருந்து நேற்று வந்திருந்தார். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏.
'மாறா' திரைப்படம் எனக்கு மிகவிதப்பான (Very Special) ஒன்று. ஜிப்ரான் இசையில் படத்தின் ஆறு பாடல்களையும் எழுதியிருந்தேன். ஆறுமே ஆறு வைரங்கள் 💎💎💎. இயக்குநர் திலீப் Dhilip Kumar என்னை வியக்கவைத்த இளம் திறமையாளர் 🌺. படம் இதுவரை பார்க்காதவர்கள் அமேசான் பிரைமில் உள்ளது, பார்த்து விடுங்கள். குழந்தைகள், குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கத்தக்க நாகரீகமான படம். இயக்குநர் திலீப், இசையமைப்பாளர் ஜிப்ரான், தயாரிப்பாளர் சுருதி நல்லப்பா Shruti Nallappa , பாடல்களைப் பாடிய அனைத்துப் பாடகர்கள் உட்பட படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். படத்தில் 'தீராநதி' என் தனிப்பெரும் விருப்பப்பாடல் 😍. Padmalatha Ramanand ...
https://www.facebook.com/share/r/1GUNfEswj3/

5.9K
105
3 months ago

Jallikkattu should be stopped. It's Barbaric.
https://www.facebook.com/share/p/1ABDyRnhgD/
16.1.2026.#மீள்பதிவு.

'வீரவிளையாட்டு இல்லை, கோழை விளையாட்டு' 😡😡😡.

ஒரு மாட்டை ஓடவிட்டு, ஓராயிரம் ₹%'+டியர்கள் மேலே விழுந்து 'அடக்கு'வார்களாம், இதற்குப் பெயர் 'வீர'விளையாட்டாம் 😡😡😡. வெட்கமாக இல்லை ??? 😡😡😡. பொழுதுபோக்க ஆயிரம் 'மனித'முறைகள் இருக்க, 'விலங்கு'களின்மேல் பாய்ந்து பிடுங்குவதுதான் 'விளையாட்டா'??.

மாடு, ஆடு, நாய், கோழி, பாம்பு-கீரி என எந்த விலங்கும் மனிதனின் விளையாட்டுப் பொருளில்லை. அவை உங்களைப் போலவே உயிருள்ள/வலியுணரும் பிறவிகள். அவற்றை வதைப்பதைக் கடுமையாக எதிர்க்கிறேன் 😡.

நான்காண்டுகளுக்கு முன் எழுதியது இப்போதும் தேவையாக உள்ளது. விலங்குவதையை விட்டு மனிதர்கள் விலகும்வரை எங்கள் எதிர்ப்பு தொடரும் 🐂🐐🐕‍🦺🐓🐍🦨 ❤.

15.1.2022. *சல்லிக்கட்டு
தேவையில்லை* !
--------------------------------
இப்படிச் சொல்லுவதால் எத்தகைய எதிர்ப்பு எழும் என்று எனக்குத் தெரியும். என்னென்ன விதமான வசவுகள் வந்து விழும் என்றும் தெரியும். இருந்தாலும் அப்பாவி விலங்குகளுக்கு வாயில்லை, பேச முடியாது என்பதால் அவற்றுக்காக நான் பேசுகிறேன். என்னை அடியுங்கள், வாயில்லா உயிர்களை விட்டுவிடுங்கள் 🙏
இதுநாள்வரை பாரம்பரியம்/பன்னெடுங்கால வழக்கம் என்பதன் அடிப்படையில் 'சல்லிக்கட்டு' என்னும் 'காளை விளையாட்டு' ஆடப் பட்டிருக்கலாம். ஆனால், விலங்குகளின் உரிமை எனும் பார்வையில் உலகம் விழித்துக் கொண்ட வேளை இது ! இனியும் சல்லிக்கட்டு போன்ற, மனிதன் விலங்குகளை அச்சுறுத்தும் அநாகரீக விளையாட்டு தேவையில்லை. சேவல் சண்டை, ஆட்டு சண்டை, நாய்ச்சண்டை,ரேக்ளா பந்தயம், குதிரைப் பந்தயம் உள்ளிட்ட அனைத்து விலங்குவாதை விளையாட்டுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
விலங்குகள் உயிர் மட்டுமல்ல, உணர்வும் உள்ளவை. அவற்றுக்கு வலி, வேதனை, அச்சம், அதிர்ச்சி, பாசம் அனைத்தும் உண்டு. அவற்றை விளையாட்டுப் பொருளாக்குவது நமக்கு வேண்டுமானால் வேடிக்கையாக இருக்கலாம், அவற்றுக்கு அது நிச்சயம் வாதையே !
எந்த விளையாட்டிலும் இருதரப்பு இருக்கும், இருதரப்புக்கும் விளையாட்டின் விதிமுறைகள் தெரிந்திருக்கும், அவற்றை ஏற்றுக் கொண்டே விளையாட வந்திருப்பார்கள். ஆனால் சல்லிக்கட்டு போன்ற விலங்கு விளையாட்டுகளில் மறுதரப்பான விலங்குகளுக்கு விதிமுறை தெரியாது...அது விளையாட்டு என்றே தெரியாது ! 😓. மறுதரப்பால் ஏற்றுக் கொள்ளப்படாத விளையாட்டை விளையாட்டு என்று சொல்வதே குற்றம் !. அதன் பெயர் வன்முறை ! 😓.

506
49
4 months ago

5.12.25. 'SIR' படிவம் உதவி
தேவை.

1. படிவம் இணையத்தில் உள்ளதா ?
படிவம் நிரப்புவதையும்
இணையவழியிலேயே செய்து
கொள்ளலாமா ? எனில், எந்த
முகவரியில் செயல்படுத்த
வேண்டும் ?

2.இல்லையெனில் படிவம் எங்கு
கிடைக்கும் ? பல முகவரிகள் மாறி
வந்து விட்டதால், 'பழைய
முகவரிக்குப் போய் நேரிலே வாங்கி
வா' என்பது எனக்கு உதவாது. மகன்
சமரனுக்கு ஒரு முகவரி, எனக்கு
வேறொரு முகவரி 😓.

3.எனக்கும் சமரனுக்கும் வாக்காளர்
அடையாள அட்டை, ஆதார் எண்,
ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட
செல்பேசி எண், இப்போதைய
முகவரிக்குச் சான்று ஆகியவை
உள்ளன. எல்லாத் தேர்தல்களிலும்
வாக்கிட்டிருக்கிறேன். நான் என்ன
செய்ய வேண்டும் ?

4.வெளிநாட்டிலிருந்தபடியே இதைச்
செய்ய முடியுமா ?
முழுவிவரமுமறிந்தவர்கள்
எவரேனும் எனக்கு உதவ முடியுமா ?
பின்னூட்டத்தில் பதிய
வேண்டுகிறேன்.

5.என் படம் இணைத்திருப்பது
பலரையும் சென்று சேர்வதற்காக
மட்டுமே ! என் பல பதிவுகள் நட்பு
வட்டங்களைக்கூட
சென்றடைவதில்லை என்று தெரிய
வந்திருக்கிறது.

2.2K
120
5 months ago

30.11.25.

நயா...கரா... என் நெஞ்சினிக்க... 😀

(18.11.25 அன்று நயாகரா அருவியில் நனையச் சென்றிருந்தோம். அருவியின் நீர் பரந்து மேலே தெளிக்குமளவுக்கு உள்ளே ஒரு படகுப்பயணம் 🛥...) 😍...
வாழ்வில் ஒருமுறையாவது இந்த அருவிப்பயணம் உலகமக்கள் ஒவ்வொருவருக்கும் வாய்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன் ❤...
என்னவொரு அற்புதமான இயற்கையின் படைப்பு 😍😍😍 !!! .

853
61
5 months ago

16.11.25. 'தமிழ் மிரர் விழா' 😍

நேற்றைய விழா சிறப்பாக நடைபெற்றது 👏. என் சிற்றுரையில் தமிழ்மொழி மட்டுமே நம்மை இணைக்கும் நூல் என்றும் அதை சிதையவிடாது காத்து எடுத்துச் செல்லும் பொறுப்பு தமிழர்களாகிய நம் அனைவருக்கும் உண்டு என்பதையும் வலியுறுத்திச் சொன்னேன்.

Charles Devasagayam
சிவம் வேலுப்பிள்ளை

4.5K
305
6 months ago

12.11.25 கனேடியக் குளிர் ⛄

என் சன்னலுக்கு வெளியே.... 😍😍😍...

(இப்படி இருந்தால் எப்படி வேலை செய்வது ??? !!! 😲).

650
71
6 months ago

🎉 I earned the fan favorite badge this week, recognizing me for consistently having meaningful conversations with my fans while sharing unique, relatable content!

191
11
6 months ago

9.11.2025.வணக்கம் கனடா 🙏

விமானத்திலிருந்து காலடி எடுத்து வைத்தவுடன் பனிப்பொழிவு... கண்கொள்ளாக்காட்சி 😍. கனடாவில் இன்றுதான் முதல் பனிப்பொழிவாம்...
'நான் வருகையிலே என்னை வரவேற்க நல்ல பனிமழை பொழிகிறது' ... 😄

(இப்போது இரவா பகலா ? சாப்பிடணுமா தூங்கணுமா ? 🤔)

1.9K
24

Story Save - Best free tool for saving Stories, Reels, Photos, Videos, Highlights, IGTV to your phone.

Story-save.com is an intuitive online tool that enables users to download and save a variety of content, including stories, photos, videos, and IGTV materials, directly from Instagram. With Story-Save, you can not only easily download diverse content from Instagram but also view it at your convenience, even without internet access. This tool is perfect for those moments when you come across something interesting on Instagram and want to save it for later viewing. Use Story-Save to ensure you don't miss the chance to take your favorite Instagram moments with you!

Our advantages:

No Need to Register

Avoid app downloads and sign-ups, store stories on the web.

Exclusive High-Quality

Stories Say goodbye to poor-quality content, preserve only high-resolution Stories.

Accessible on All

Devices Download Instagram Stories using any browser, iPhone, Android.

Completely Free to Use

Absolutely no fees. Download any Story at no cost.

Frequently Asked Questions

The Instagram Stories Download feature is designed to provide a secure and high-quality method for downloading Instagram stories. It's user-friendly and doesn't require users to register or sign up. Simply copy the link, paste it, and enjoy the content.
Downloading Instagram stories is a simple process that involves three steps:
  • 1. Go to the Instagram Story Downloader tool.
  • 2. Next, type the username of the Instagram profile into the provided field and click on the Download button.
  • 3. You'll then see all the Stories that are available for the current 24-hour period. Select the ones you want and hit Download.
The selected story will be swiftly saved to your device's local storage.
Unfortunately, it is not possible to download stories from private accounts due to privacy restrictions.
There is no limit to the number of times you can use the Instagram story download service. It's available for unlimited use and is completely free.
Yes, it is legal to download and save Instagram Stories from other users, provided they are not used for commercial purposes. If you intend to use them commercially, you must obtain permission from the original content owner and credit them each time the story is used.
All downloaded stories are typically saved in the Downloads folder on your computer, whether you're using Windows, Mac, or iOS. For mobile devices, the stories are saved in the phone's storage and should also appear in your Gallery app immediately after download.